மாற்றம்
சூழ் நிலைகளில் மாற்றம் இல்லை
சந்தர்ப்பங்களில் மாற்றம் இல்லை
பொழுதுகளில் மாற்றம் இல்லை
இரவுகளில் மாற்றம் இல்லை
அக்கறையில் மாற்றம் இல்லை
பாசத்தில் மாற்றம் இல்லை
பழகும் விதத்திலும் மாற்றம் இல்லை
அன்பின் அரவணைபில் மாற்றம் இல்லை
நடந்து கொள்ளும் விதத்தில் மாற்றம் இல்லை
செய்யும் செயல்களில் மாற்றம் இல்லை
வார்த்தைகளிலும் மாற்றம் இல்லை
சென்று வரும் இடங்களில் மாற்றம் இல்லை
ஒரே ஒரு மாற்றம் தான்..
நேற்று நான்! இன்று ?
உன் ஒரே ஒரு மாற்றம்
எனது வாழ்கையின் மிக பெரிய ஏமாற்றம்.
இதில் இங்கு பலர் சொல்லும் பழமொழி
மாற்றம் ஒன்றே மாறாதது...
ஒருவரின் மாற்றம் மற்றவரின் வாழ்வில்
ஏமாற்றமாகவிட கூடாது.