நேர்மை,நாணயம்,உழைப்பு வீண்போகாது

நேர்மை,நாணயம்,உழைப்பு வீண்போகாது
சிவகங்கை சீமை மாவட்டத்தில் திருமயம் தாலுகாவில் ஒரு கிராமத்தில் நடந்த அனைவருக்கும் படிப்பினையாக ஒரு நல்ல நீதி கதை. அழகும் இயற்கையும் கொஞ்சும் கிராமம் பசுமைக்கு பஞ்சமே கிடையாது. கிராமத்தில் வாழும் குடும்பங்கள் என்னும் அளவிற்கு இருந்தது. அனைத்து குடும்பங்களும் தன்னடக்கத்தோடு கிராமத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்தன. கிராமத்தில் பேசும்படி மிகவும் முக்கியமான இரண்டு குடும்பங்கள் இருந்தன. அந்த குடும்பத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாக இருப்பார்கள். இரண்டு குடும்பத்திலும் . வயது முதிர்ந்த பிள்ளைகள் இருந்தனர். கிராமத்தில் ஆரம்ப பள்ளிகள் மட்டுமே இருந்தன இதனால் பிள்ளைகள் குறைவாக படித்தனர்.
அதிகம் படிக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள நகருக்கு செல்ல வேண்டும். இரண்டு குடும்பத்தில் இருந்த பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் ஒருவர் ராமு மற்றொருவர் சேது இருவரும் ஒத்த வயது உடையவர்கள். இருவருக்கும் ஒரு வேலையும் கிடையாது. தினம் ஊரை சுத்தி விட்டு சாப்பிட்டு தூங்குவது தான் வழக்கம். இருவரும் ஊதாரித்தனமாக பெற்றோர் பணத்தை செலவு செய்து சுற்றி வந்தார். இருவருக்கும் திருமண வயதை எட்டியதால் .. பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுத்தனர் அனல் வேலை இல்லாததால் திருமணம் கைகூடி வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ராமு என்பவர் ஒரு யோசனை சொன்னான் நம்ம கிராமத்துக்கு அருகில் உள்ள நகருக்கு சென்று லோட்டேர் வாங்கிவந்து நம்முடைய கிராமத்தை சுற்றி விற்போம் அதில் வரும் கமிஷனை இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என்றான். அவன் சொன்னது போல இருவரும் சமமாக முதலீடு செய்து தொழிலை தொடங்கினார். தொழில் ஓரளவு ஒட்டிக்கொண்டு இருந்தது.
அத சமயத்தில் பெற்றோர்களின் முயற்சியால் இருவருக்கும் திருமணம் நடந்து முடித்து. வாழ்கை நிதானமாக நன்றாய் போய்கிண்டிருந்தது அந்த சமயத்தில்தான் அவர்கள் இருவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அது வேற ஒன்றும் இல்லை அவர்கள் விற்ற லாட்டரி சீட்டுக்கு 1 கோடி பரிசு விழுந்துள்ளது என்ற செய்திதான். இருவரும் உடனே தங்கள் ஏஜெண்டை பார்க்க சென்றனர் அவரிடம் இவர்கள் வைத்திருந்த லாட்டரி கவுண்டர் பிள்ளை காண்பித்து இதற்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று கேட்டனர் அதற்கும் அவர் இதற்கு பத்து லட்சம் கிடைக்கும் என்றார். உடனே இருவரும் அவரை பார்த்து கேட்டனர். இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். பிரிந்த பிறகு இருவரில் ராமு என்பவர் லாட்டரி விற்பதை விட்டுவிட்டு வேறு தொழில் செய்தேன். சேது அதே லாட்டரி விற்பனையை மட்டும் செய்தேன்.
சேதுவின் மாமனார் எவ்வளவோ சொல்லியும் சேது கேட்டது இல்லை. உடனே அவர் மாமனார் நீங்கள் சொல்வதை கேட்பதாக தெரியவில்லை ஆகையால் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை சிறு தொகையை கொடுங்கள் நான் என் மகளுக்கு ஒரு சின்ன வீடு சொந்தமாக வாங்கி கொடுக்குறேன். மீதமுள்ள தொகையை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் , மாமனாரும் சொன்னதுபோல் வீடு வாங்கிக் கொடுத்த. இருநண்பர்களுக்கும் இரண்டு குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண். குழந்தைகள் உள்ளூர் பள்ளியில் படித்தார்.

நண்பன் ராமு என்பவர் லாட்டரி தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து வந்தார் அதிக லாபம் கிடைத்துக்கொண்டிருந்தது. மற்றொரு நண்பர் சேது என்பவர் லாட்டரி தொழிலை சிறிது அதிகப்படுத்தி உயர்வான ஹோட்டலில் ரூம் எடுத்து விமர்சியாக செய்து வந்தார். அப்போதுதான் அவருக்கு பல தீய பழக்கவழக்கங்கள் ஏற்பட்டது தினம் குடிப்பது சிகரெட் தொடர்ந்து புஹைப்பது மற்றும் பல பெண்களுடன் தகாத உறவு என்று நீண்டுகொண்டே சென்ற நாளுக்கு நாள். வரும் நாட்கள் தொடர்ந்து சேது பல தவறுகளை செத்தார் அவரிடம் இருந்த பணம் தண்ணீரில் கரைத்த உப்பு மாதிரி கரைந்து கொண்டே இருந்தது. அவரது மற்றொரு நண்பர் ராமு தான் செய்யும் தொழிலை பெரிய அளவில் முன்னேறிக்கொண்டிருந்தான்.
அவருக்கு எந்த தீய பழக்கம் கிடையாது மேலும் கடவுள் பக்தி அதிகம் நேர்மை நாணயம் அவருக்கு ரொம்ப முக்கியம். நண்பர் சேது லாட்டரி தொழிலை அதிக நஷ்டம் ஏற்பட்டது குடும்பம் நடத்த பண பற்றாக்குறை ஏற்பட்டது ரொம்ப சிரம பட்டார். கையில் வைத்திருந்த பணம் முழுவதும் காலி பண்ணிவிட்டார். பிள்ளைகளை படிக்க வைக்க ரொம்ப சிரம பட்டார். பல தெரியாத நபர்களிடம் பணம் வாங்கி படிக்க வைத்தார். இறுதியாக அவரிடம் மிஞ்சியது மாமனார் வாங்கிக்கொடுத்த வீடு மட்டும் தான். பிள்ளைகளுக்கு திருமானவையாது நெருங்கியது. சேது தான் பெண் பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்த்தனர் ஆனால் வரதட்சணையாக அதிக பணம் கேட்டார். வேறுவழியின்றி இறுதியாக இருந்த வீட்டையும் விற்று அந்த பணத்தில் மகளின் திருமணம் முடித்தனர்.
மக்களின் திருமணத்திற்கு பிறகு சேது வாடகை வீட்டிற்கு குடியேறினர். இனி வாடகை கொடுக்கவேண்டும் மற்ற செலவுகள் வேற இருக்கு என்று அருகில் உள்ள ஒரு கடைக்கு சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு போனார். ஆனலும் பணம் பற்றாமல் ரொம்ப செரமப்பட்டார். சிலநாட்கள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இன்னொருபக்கம் அவர் நண்பர் ராமு கொடிகட்டி பறந்தார் தான் செய்யும் தொழிலில். மக்களிடம் அதிக நம்பிக்கை பெற்றதால் ஒருக்கு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நண்பர் சேதுவின் வாழ்க்கையோ இன்றும் கஷ்டத்தில் காரணம் அவர் ஒழுக்கம் தவறியதால் வந்த விளைவுகள். இருநண்பர்கள் கதையில் இருந்து என்ன விளங்குகிறது என்றால் நேர்மை, நாணயம், உழைப்பு, ஒழுக்கம் உடையவன் கண்டிப்பாக முன்னேறுவான் இவற்றை தவறவிடுபவன் அதற்கான தண்டனையை அனுபவிப்பான்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (29-Jun-21, 10:57 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 165

மேலே