கெட்டபின்பு ஞானி

கடலில் தவறி விழுந்து
கிடைத்ததை பிடித்துக்கொண்டு
கரை ஏறியவனிடம்
கேட்டுப்பார் ...!!

கண்ணுக்கு தெரிந்த
துரும்பை எல்லாம்
கட்டுமரமாக நினைத்து
வேண்டாத கடவுளை எல்லாம்
வேண்டியதை சொல்வான் ...!!

அதுபோல்தான்
வாழ்க்கைக்கடலில்
முட்டி மோதி
நீந்தியவனுக்குதான்
வாழ்க்கையின்
அருமை புரியும் ..!!

கரையில் இருப்பவனுக்கு
அது புரியாது ...
சொன்னாலும் தெரியாது ..!!

கெட்டபின்பு தானே
ஞானியின் உபதேசங்கள்
தேன்போல் தித்திக்கும் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Jul-21, 7:24 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 399

மேலே