வாழ்த்து
வாடா எனத்தொடங்கி வாழ்த்து என முடியும் பல்வகை வெண்பாக்கள்
***********************************************************************************************
வாடா மலரென வாழ்க்கையை வாழ்ந்திட
வாடா உனக்கொரு வாழ்த்து
**
வாடாதே நண்பா வசந்த வருகையைத்
தேடா திருந்திடல் தீமையே போடாநீ
வாடா திருக்குந்தன் வாழ்த்து
**
வாடா மலர்களில் வந்தமரும் தேனிக்கள்
தேடா திருப்பதுண்டோ தேன்துளி? –தேடலைக்
கூடா தெனவஞ்சிக் கோபத் துழல்ந்திட
வாடா வெனுமாநல் வாழ்த்து
**
வாடா துளமிருக்க வா வாழ்க்கைத் துணையமைந்தால்
கூடாப் பகைவரும் கூட்டாளி. – கேடாகப்
பாடாய்ப் படுத்துகின்றப் பாவை அமைந்திடின்
மாடாய் உழைத்துநீ மண்வெட்டி யாகிடினும்
வாடா துதிர்க்காளே வாழ்த்து
***