மனக்காயம்

சில நேரம்
நான் வேடனாக மாறி
அம்பு எய்தி விடுகிறேன்

சில நேரம்
நீ
அம்பு எய்தி விடுகிறாய்!

இருவருக்குமே காயம்!
இக்காயங்கள்!
கல்யாணத்தில் சரியாகும்??

சில காயங்கள்
கைக்கிளையால்
ரணமாக தொடரும்!

காயத்துக்கு மருந்து
போடஎண்ணி
என் மகளுக்கு உன் பெயரை
வைத்தேன்!

காயம் ஆறவில்லை
தோலில் உண்டான படைபோல
சொரிய சொரிய பரவியது
நினைவு அதிகமாகியது!!

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (5-Jul-21, 6:05 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 278

மேலே