பெண்மையின் பேராற்றல்

பேராற்றல்

பெண்ணே
நீ பேராற்றலின்
சிறு பொறி!

பெண்ணே!
எடுத்துக்காட்டு
வேண்டுமா?


கனல் விழியால்
மதுரையை எரித்தாள்
கண்ணகி!

ஓடி ஓடியே
உலகத்தின்
பார்வையை
தன் காலடியில்
விழ வைத்தாள்
பி டி உஷா!


அடிமை சிறையை
அகிம்சையால்
உடைத்து
சுதந்திர நாடாக்கினாள்
ஆங் சாங் சூகி!


நில்லென்று
சொல்லி
நில்லாத சூரியனை
நிறுத்தினாள்
நளாயினி!


காலனையும்
கருத்து பிறழ செய்து
கணவன் உயிர்
மீட்டாள்
சாவித்திரி!


வஞ்சகம் ஏந்தி
வந்த
ஆங்கிலேயரை
வாளேந்தி விரட்டினாள்
இராணி இலட்சுமிபாய்!


பெண்ணே நீ
தீக்குச்சி!
ஒரு பெட்டியில்
அடங்கி விடாதே!


உன் அனலை
அடுக்களையில்
அடக்கம் செய்து விடாதே!
அக்னி பார்வை
கொள்!

அகிலத்தை
உன் பார்வையால்
அடக்கு!


உயிர்த்தெழு
உயரங்கள் தொடு
உனக்குள்உள்ள
உள்ளொளி
பெருக்கு!


பேராற்றலின்
சிறு துளியே!
அணுகுண்டைப் போல்
வெடி!
அகிலம் காணும்
புதுவழி!

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (6-Jul-21, 12:03 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 1322

மேலே