காதல்
செந்தாமரையாய் வட்ட முகம் பிறைமதியாய்
நுதலும் அதில் இட்ட பளிங்கு குங்குமப்பொட்டு
வில்லை இமை இரண்டு அதன்கீழ்
சுழலும் கயலாய்க் காந்த கண்ணிரண்டு
நேர்த்தியான சின்ன நாசி சிவப்பு மூக்குத்தி
கூம்பிய கோவைப் பழமாய் அதரம்
அதன்கீழ் முகம் தாங்கும் நீண்ட கழுத்து
இப்படித்தான் அமைந்திருந்த அவள் வண்ண முகம்
நான் கனவில் கண்டா என்னவள் முகம்