செத்து விடலாம் என்றே - வெண்டாழிசை

செத்து விடலாம் என்றே நினைக்கதே
மொத்தமும் பாழ்படும் உன்னாவி அலையும்
வித்தை கற்றே தெளி ------ (1)

உலகம் சுழல்வதும் ஒருவகை தவமே
பலயுகம் நிலையாய் இருந்தும் தொய்வில்லை
பலமாய் இன்று வரையில் ------ (2)

வேருள்ள உயிருக்கு வெவ்வேறு பெயர்கள்
நீருள் வாழ்பவைக்கும் விதவிதப் பெயர்கள்
பாரினை சிதைப்பவர் மனிதனாம் ------ (3)

காற்றும் நீரும் கடலும் இல்லையெனில்
ஊற்றும் உயிரும் பயிரும் பலவும்
மாற்றம் இன்றியே இருந்திருக்கும் ------ (4)

உலகை ஆள நோயை பரப்பினால்
உலக்கையால் இயற்கை பரப்புவோரை அடித்து
உலையில் தள்ளி நீருற்றிடும் ------ (5)

ஐம்பொறி அடக்கும் மனிதர் சிலராலே
ஐம்பூதமும் அடங்கி சேவையை செய்யும்
வம்பிட்டால் பொங்கி அழித்திடும் ------ (6)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Jul-21, 7:29 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 78

மேலே