போதுமடா தோழா


நான் உன்னவள்தான்
மென்மையானவள் தான்
உன் கவிதையும் மென்மை ஆனது
இனிமை ஆனது

மின் அஞ்சல் பெட்டி
நிரம்பி வழிகிறது
spam மிலும்
சிதறிக் கிடக்கிறது
உன் கவிதை
போதுமடா தோழா
இடைவெளி கொடு
இடைவேளை கொடு
நன்றி சொல்வேன்
கணினியும் நன்றி
சொல்வாள்
தி .கு.பி.கு.
பீலிபெய் சாகாடம் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
உன் ஆருயிர்த் தோழி

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-11, 7:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 371

மேலே