பெண்ணின் உள்ளம்

காகிதத்து ஓடங்கொண்டு கடற்தாண்டி பயணிப்பேன்
ஓவியத்து அழகுவீட்டில் குடியிருந்து வாழ்ந்திடுவேன்
காற்றின் மீதேறியே கண்டங்களை சுற்றிடுவேன்
ஊமையின் மொழியினால் ஒய்யாரமாய் பாடிடுவேன்
ஆமையின் வேகத்தால் காற்றினையே விஞ்சிடுவேன்
கடலின் நீரையுலர்த்தி கற்கண்டு செய்திடுவேன்
வேம்புவின் இலையரைத்து நெய்சுவை தந்திடுவேன்
இவையெல்லாம் செய்யும் என்னால்
பெண்ணின் உள்ளம் அறிதலில் சோர்ந்திட
இழைத்து தேய்ந்த சந்தனக் கட்டையென ஆனதே மனம்.
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (2-Aug-21, 9:44 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 124

மேலே