கானாங்கோழிக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

உத்தமமாம் நோயனைத்தும் ஓடும் இருமலறும்
பத்தியமாம் நோயோர்க்குப் பார்மீதில் - முத்தநகை
மானே கரப்பான்போம் மாசு மறுஅகலுங்
கானாங்கோ ழிக்கறியைக் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இது வாத, கபநோய்கள், காசம், கரப்பான், மறு இவற்றை நீக்கும்; பத்தியத்திற்கு உதவும்

காணான்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae)

கானாங்கோழி

கானாங்கோழி அல்லது கூவாங்கோழி என்பது பெரியளவில் உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய மற்றும் நடுத்தர அளவு பறவையாகும். இக்குடும்ப பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரையினை வாழ்விடமாகக் கொண்டவையும் ஆகும். கானாங்கோழிகள் அன்டார்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல தீவு இனங்களாக உள்ளன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-21, 10:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே