தெரிந்து கொண்டேன் உன் புன்னகையிலிருந்து
சிந்தும் உன் புன்னகையிலிருந்து
சிந்து வெளியிலும் தமிழ் நாகரிகம்தான் என்பதை
அகழ்வாராய்ச்சியில் சொல்லும் முன்னே
நான் தெரிந்து கொண்டேன்
புன்னகையை நீ சிந்தாமல் சென்றால்
பூக்களும் தினம் மலரும்
நாகரிகத்தை மறந்துவிடும்
ஆதலினால்
சிந்துவாய் இளம் புனைகையை செந்தமிழே
ஒரு முறையாவது ...