லொக் டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 08

08

"ஹாய்... செல்லக்குட்டி... என்ன செய்கிறாய்...?" - அவளின் மனநிலையை அறிந்து கொள்ள முயன்றான்.

"ஐயா... இப்ப தான் எழும்பினவர் போல... நைட் முழுக்க தலையிடி தானே... என..." - குரலிலும் தொனியிலும் மாற்றம் இருப்பதை உணர்ந்து கொண்டான். ஆனாலும், தெரியாதது போல் இருந்து கொண்டான்.

"ஓமடி செல்லம்... நல்லா தூங்கிட்டன்... இப்போ தான் எழும்பினேன் என்றால் பார்த்துக்கோவன்..." - ஆதி

"பொய்.... பொய்.... எல்லாம் பொய். வாயை திறந்தால் வாறதெல்லாம் பொய் தான்..." - ஆட ஆரம்பித்தால் தமிழிசை

"" அடியே தங்கம்... நான் உன்கிட்ட பொய் சொல்லுவேனா சொல்லு..."

"சரி... இண்டைக்கு ஏன் கோயிலுக்கு வரேல்லை என்று சொல்லுங்கோ பார்ப்போம்... அம்மா, அப்பாக்கு முன்னாடி எவ்வளவு அசிங்கமா போய்ச்சு தெரியுமா... உங்களை நம்பினதுக்கு இதுவும் வேணும் எனக்கு..." - தமிழிசை ஆரம்பித்தாள்

வழமையாக வாடா, போடா என்று கதைப்பவள் வாங்கோ, போங்கோ என்று கதைக்கிறாள் என்றால் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

"இல்லை செல்லம்... அலாரம் வைச்சனான்... அடிச்சது கூட கேட்காமல் நல்ல தூக்கம் டி. அதான் வரமுடியலை... சொறி டி குட்டிம்மா..." - ஆதி

"அது சரி... ஐயாவுக்கு தான் உலகம் முழுக்க ஆக்கள் இருக்கே... எவள் எவளோடோ கடலை போடுறது. பிறகெப்படி எழும்புறது..." - தமிழிசை

"நேற்று நைட் உன் கூட கதைக்கும் போதே தலையிடிக்குது; ஏலாது என்று சொல்லிட்டு தானே படுத்தனான். பிறகென்ன டி..."

"அப்போ உங்க அம்மா சொன்னது பொய்யா... அம்மா சொன்னவா நீ இரவிரவா போன் நோண்டிக்கொண்டு இருந்தனியாமே..."

"அம்மா சொன்னவாவா... அம்மாக்கு போன் பண்ணினியா..." - ஆதி

"ஐயாவுக்கு வீட்ட வந்தது கூட தெரியாதோ..." - தமிழிசை

"காலையில் வீட்ட வந்தனியா... சத்தியமா தெரியாது... நான் இப்போ தான் எழும்பினேன். அம்மாவும் தங்கச்சியும் கடைக்கு போயிட்டாங்க..." - ஆதி

"நான் ஒரு விசரி. உண்மையிலேயே ஏலாமல் தான் வரேல்லையாக்கும் என்று புக்கை, வடை, மோதகம் கொண்டு வந்து கொடுக்க வந்தால் இப்ப தானே ஐயாட சீலம்பை தெரியுது..." - கோபத்தில் இருந்தாள் தமிழிசை

எழுதியவர் : பெல்ழி (9-Aug-21, 10:56 am)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 141

மேலே