புன்னகைக்கும் அவள் கண்கள்
முழுநிலவாய் ஒளிப்பிழம்பாய் நங்கை அவள்
எழில் முகம் என்மனதைக் கிள்ள
ஏனோ அவள் முகக் கவசம்
அவள் அதரங்கள் சிந்தும் புன்னகையை
கண்டு ரசிக்க விடாமல் மறைக்கின்றதோ
என்று நான் நினைக்கையிலே கடலென
விரிந்த அவள் தாமரைக் கண்கள்
காந்தமென என்னை ஈர்க்க அதில்
நான் கண்டேன் களிநடம் புரியும்
அவள் புன்சிரிப்பும் புன்னகையும்