என் பார்வையிலிருந்து
என் பார்வையிலிருந்து நீ
மறைந்தாலும் , மறையாதிருக்கும்
உன் நினைவுகளால் நிதமும்
மரணம் கொள்கிறது மனது...
நினைவுகள் என்னை விட்டு
நீங்காது இருப்பதனால்
விழிகள் என்றும் உன்னை
தேடி திரிந்தே வழிகிறது
அன்பே ...
மறைந்து செல்லும் முன்
மீண்டும் உன்னை பார்க்கும்
வாய்பெனக்கு வாராது
எனச்சொல்லி சென்றிருந்தால்
மௌனமாய் ஏனும் மடிந்திருக்குமோ
என் காதலே...
இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35