காதல் சுகமானது
பல புத்தங்களை படித்து விட்டேன்
உன் மனத்தை என்னால் படிக்க
முடியவில்லை
வெள்ளை காகிதாமாக இருந்த
மனத்தில் பேசும் ஒவியமாய்
வந்தாய்
புரியாத பல புதிர்களை எனக்கு
தந்தாய்
பல புதிய கவிதைகளை படைக்க
வைத்தாய்
உன்னை நேசிக்காக வைத்தாய்
புது வசந்தமாக வந்து விட்டாய்
வானம் பாடும் பறவையாக
என்னை மாற்றி விட்டாய்
காதல் சுகமானவை என
சாெல்லி விட்டாய்