மீசை மீரா

மீசை என்றால் அவளுக்கு
ரொம்பப்பிடிக்கும் என்பாள்

அவள் அப்பாவின்
கிடா மீசையில் ஊஞ்சல்
கட்டியே ஆடலாம் என்பாள்

என் மாமா பையனுக்கு
விகார மீசை என்பதால்
அவனை பிடிக்காதென்பாள்

புலிவால் மீசையுடன் தனது
கலைநிகழ்சி புகைப்படத்தை
ரசிப்பது வேடிக்கை என்பாள்

மீசைக்கும் குணத்திற்கும்
சம்மந்தம் உண்டென்ற தனது
கூற்றில் உறுதியாய் இருப்பாள்

என் அரும்பு மீசையையும்
குறும்பு பார்வையையும்
மயில்கற்றை கூந்தலையும்
கெண்டை மயிர்களையும்

அந்தரத்தின் அணில்வால்
மீசையையும் ரசிக்க யாருக்கு
கொடுத்து வைத்திருக்கிறதோ
என்று ஏக்கத்தில் அவள் கண்மூடி
லயித்திருக்கும் வேளைகளில்

வளராத என் மீசையும்
கோபத்தில் துடிக்கவே செய்யும்
சுய கழிவிரக்கம் கொண்டு...டு...டு..!

எழுதியவர் : மேகலை (11-Aug-21, 4:32 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : meesai meera
பார்வை : 155

மேலே