முள்ளில்லா பிங்க்நிற எழில்மலர் ரோஜாவோ

மலர்விரி எழில்தோட் டத்தினில் மௌன விழிகள் அழகில் விரிய வரும்நீ
சிலையோ ரவிவர்மன் தீட்டிய காதலெழில் ஓவியமோ கிரேக்கப் பளிங்கு பதுமையோ
கலைந்தாடும் கார்மேகக் கூந்தல் தென்றலுடன் உறவாட புன்னகை மின்னல் இதழோட
அலைகடல் நீலம் விழியசைய கள்ததும்பும் முள்ளில்லா பிங்க்நிற எழில்மலர் ரோஜாவோ ?

---கழிநெடிலடி எண்சீர் ஆசிரிய விருத்தம்
ஆறு ஏழு எண் அல்லது எட்டு சீர்கள் கழி நெடிலடி
நான்கு சீர்கள் அளவடி ஐந்து சீர்கள் நெடிலடி
ஒரே எதுகை( மலர் சிலை கலை அலை )
எட்டுசீர் கழிநெடிலடி நான்கு கொண்டு அமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தம்

இக்கவிதை நான்கு சீர் அளவடி நான்கு பெற்று வரின் கலிவிருத்தம்
ஐந்து சீர் நெடிலடியில் அமையின் கலித்துறை
இவை பாவினம் தளை விதிகள் இவைகளுக்கு இல்லை எளிதில் எழுதலாம்
தேவை எதுகை உங்கள் கற்பனை
கம்பனை உயர்த்தியது இந்த விருத்தம்தான்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-21, 5:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே