யார் சிறந்த வில்லாளி

சிறந்த வில்லாளி யார்
ராமனா...??
அர்ஜுனனா ...??
என்ற தலைப்பில்
பட்டிமன்றம் நடந்தது ..!!

அந்த பட்டிமன்றத்தில்
பார்வையாளனாக
நான் அமர்ந்திருந்தேன் ..!!

சற்று தள்ளி
காரிகை ஒருத்தியும்
அமர்ந்திருந்தாள் ..!!

பட்டிமன்ற மேடையில்
பேச்சாளர்கள்
சிறந்த வில்லாளி
ராமன் என்று ஒருசாராரும்
இல்லை இல்லை
அர்ஜுனன்தான் என்று
ஒருசாராரும் காரசாரமாக
விவாதம் செய்து கொண்டிருக்க

கூட்டத்தில் சற்று தள்ளி
அமர்ந்திருந்த காரிகை
கண் இமைக்கும் நேரத்தில்
தன் கண் விழியால்
கணை தொடுத்து
என்னை வீழ்த்தி ..!!

யார் சிறந்த வில்லாளி
என்ற பட்டியலில்
அவள் பெயரையும்
இணைத்து விட்டாள் ...!!

பட்டிமன்ற தலைவரின்
தீர்ப்பு எப்படி இருந்தாலும் ..!!

என் மனம் என்ற மன்றத்தில்
சிறந்த "வில்லாளி" என்னை
வீழ்த்திய காரிகையே என்று
தீர்ப்பு கொடுத்து விட்டேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Aug-21, 8:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 128

மேலே