கன்னிகை
காலை வேளையில் இருந்து
கணப்பொழுதும் விரையமாக்காமல்
காவல் இருந்தேன்
காளைநான், அப்பொழுதெல்லாம்
கண்ணாமூச்சி விளையாடிவிட்டு
கசிந்துருகி மனம்குமைந்து
கண்ணயரும் வேளையில்
கனவுகன்னியாக வந்து
கண்ணடித்து கண்ணடித்து
கட்டியம் கூறும்மிந்த
கன்னிகையான இவளை
கட்டியணைக்க மனம்தவித்து
கனக்குதடி கணப்பொழுது!!!