பேராமுட்டி வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதசுரத் தாகம் மதலைக் கணமாந்தஞ்
சீதசுரம் பித்தமெனச் செப்பணங்கு - மோதுநம்மாற்
சேராமுட் டிக்கேகுஞ் செய்ய மடமயிலே
பேராமுட் டித்தூரைப் பேசு
- பதார்த்த குண சிந்தாமணி
இவ்வேர் வாதசுரம், தாகம், மாந்தகணம், குளிர் சுரம், பித்த நோய் ஆகியவைகளை நீக்கும்