ஏனடா அப்படி கூறினாய்❓

மறந்திடு என்று கூறியும்
பேசாதே என்று கூறியும்
எனை அறியாமல் என்னுள்
நினைவாக நீயே வருகிறாயே......!!!

விரும்பாதே என்று கூறியும்
விலகிடு என்று கூறியும்
வார்த்தைகளில் என்னுடனே
நீயே இருக்கிறாயே.....!!!

உடன் வராதே என்று கூறியும்
உயிரை வாங்காதே என்று கூறியும்
என்னுடனே உயிருடன்
உயிராக கலக்குகிறாயே......!!!

ஊமையாக இரு என்று கூறியும்
ஊடுருவாதே என்னுள் என்று கூறியும்
என் கவலைகளுடன்
என்னுடனே பயணிக்கிறாயே.....!!!

எதை கூறினாலும்
எப்படி கூறினாலும் உன்னுடைய நன்மைக்கே என்றாயே.....!!!

ஏனடா அப்படி கூறினாய்❓
ஏனடா அப்படி கூறினாய்❓

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (7-Sep-21, 1:03 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 129

மேலே