👁️விழி அசைவில்👁️
அவள் மேனியோ சிலை அழகு
அதில்
நனைந்த ஆடையில் பேரழகு
அதில்
படர் கொடியோ அவள் ஆடை
அவள்
இடையோ வீணை
அவள்
நடையோ இசையின் சப்தம்
அவள்
குரலோ இசையின் இனிமையான இராகம்
அவள்
கைகளோ புல்லாங்குழல்
அவள்
விரல்களோ பியானோ
அவள்
கூந்தலோ கீதம் பாடும் இசைக் கருவி
அவள்
விழி அசைவே அதற்கு காரணமாம்