கடைசி கடிதம்

ஒரு காதலனின் கடைசி கடிதம்
**********************************

நீ என்னை இவ்வளவு கேவலப்படுத்திய பின்பும் கூட, உன்னை என்னால் வெறுக்க முடியவில்லை பார்த்தாயா....?.

இந்த இடத்தில்...
இந்த இடத்தில் தானடீ, நீ என்னை ஜெயித்து விட்டாய்....
பரவாயில்லை...

நீ ❣️
ஜெயித்து
விட்டுப்போ...

நான்
தோற்றுவிட்டுப்
போகிறேன்...

சந்தோஷமாகத்தான்
இருக்கிறது....
தோற்றது
உன்னிடம் தான்
என்பதால்...!

இப்போது என்ன?. என்மேல் உனக்கு இருந்த கவர்ச்சி விலகி விட்டது.... அவ்வளவு தானே...?
சரி.. போ...
நான் எவ்விதத்திலும் குறுக்கே நிற்க போவதில்லை...

போலி அன்பு மட்டுமல்ல...
அதீத அன்பும் இப்படிதான் பிரிவின் கைகளிலேயே முடிந்து போகுமோ என்னவோ.....

"ச்சை.... உன்னை நம்பி என் அந்தரங்கங்களை உன்னிடம் சொல்லி விட்டேனே... எனக்கு வெட்கமாக இருக்கிறது", என்றாயே...

முத்தமிடும் போது இப்படி வெட்கப்படாமல், இப்போது சொல்வது,
எனக்கு துக்கம் மட்டுமல்ல...
அது என்னை அதிர்ஷ்டசாலியாகவும் உணர வைக்கிறது....(இதை கேட்டதற்கு பிறகும் எனக்கு ஒரு சாவு வரவில்லை... நான் அதிர்ஷ்டசாலி தானே....?)

மறுக்கவும்
மறக்கவும் முடியாத, நம் கடைசி சந்திப்பை நினைவிருக்கிறதா...?.

அள்ளி
இறைத்த
வார்த்தைகள்....

எனக்கு
அது

கொள்ளி
வைத்த
தீப்பந்தங்கள்...

கோபத்தில் சொன்னாயோ?. இல்லை நிதானமாக, என்னை கோபமூட்டுவதற்காக சொன்னாயோ....?.
தெரியவில்லை...

அது மட்டுமா தெரியவில்லை...?.
"என்ன... உன்னால் 💝 என்வாழ்வு சீரழியும்.... அவ்வளவு தானே.."
வெகு அசால்ட்டாக சொல்லிவிட்டாய்...

ஒரு போதும் உன்னிடம் நான் அப்படி நடந்து கொண்டதில்லையே.... எவ்வளவோ வாய்ப்புகள்... ஆனாலும் என் கட்டுப்பாட்டை நீயே ❣️ நிறைய முறை பாராட்டியிருக்கிறாய்...
அதெல்லாம் உனக்கு மறந்து விட்டதா
இல்லை என்னை காயப்படுத்த வேண்டும் என்று சொன்னாயோ....
எனக்குத் தெரியவில்லை.

நிதானமாக கோபப்படும் நான், நிதானம் இழந்தது அன்றுதான்.

ஒத்துக்கொள்கிறேன். தவறுதான்.. கோபத்தில் பேசியது தவறுதான்...

ஆனால் ஒரு சிலேட்டு பென்சில் திருடியதற்கு மரண தண்டனையா...?. sentenced to death.

பரவாயில்லை...

உன்னை எதிர்த்து பேச கூட பயப்படும் என்னிடமே,
"நீ குரங்கு னு எனக்குத் தெரிஞ்சிடுச்சி...
இனியும்
உன்னிடம் கை குலுக்க
எனக்கு என்ன பைத்தியமா...??"
இதை எப்படி உன் உதடுகள் உச்சரித்தன என்று இந்த நொடி வரை எனக்குப் புரியவில்லை....

அது மட்டுமா...
இன்னும் எவ்வளவோ எனக்கு விளங்கவில்லை.

சரி விடு...
நீ குழந்தை... பல விஷயங்கள் உனக்குத் தெரியவில்லை...
நிச்சயம் ஒரு நாள்
தெரியலாம்..

தெரியும்...!.

ஆனால்
வாழ்வின்
கோரங்கள்
நிச்சயமாக
ஒருநாள்
உனக்குப்
புரிய வைக்கும்
நீ
தவறவிட்ட
என்
நேசத்தை....!

நாம் விரும்பி கேட்கும் "நிலவே முகம் காட்டு...", எஜமான் பாடலை அத்தனை எளிதாக மறந்து விடுவாயா...?.

எனக்கு பிடிக்காத hmmmmm ,சொல்லை இனி எங்கே பயன்படுத்துவாய்....?.

உன் பெயரானாலும்
உனக்கே உன் பெயரை பிடிக்காமல் போனதே, என்னால் தான் என்பாயே.
நம்மிருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை இனி என்ன செய்வாய்..?


உனக்கு எதிராக எதையும் செய்து விடுவேனோ என்பது தானே உன் பயம்....?. கவலைப்படாதே..

என்மேல் எனக்கே நம்பிக்கை இல்லாததால் தான்,

மிக
சுத்தமாக எரித்து விட்டேன், உன்னை என்னுடன் தொடர்பு படுத்தும் அத்தனையையும், என்னைத் தவிர.

கடைசி சாட்சியான என்னையும் விரைவிலேயே...

ஏனெனில் சாட்சிகளை நீ எப்போதும் விரும்புவதில்லையே....
உயிருள்ள கடைசி சாட்சியான என்னை மட்டும் விரும்பவா போகிறாய்....?.

சாட்சிகளை
பெண்களுக்கு
எப்போதும்
பிடிப்பதே
இல்லை..
அதுவும்
உயிருள்ள
சாட்சிகளை...

ஆதலினால்,
தற்கொலை
செய்வீர்
ஆண் இனத்தோரே....

(அவளுக்கு... அவள் காதலித்ததற்கு இருந்த முதல் மற்றும் கடைசி உயிர் சாட்சி, காதலன் தானே.. அவனும் தற்கொலை செய்து கொண்டால் கடைசி உயிர் சாட்சியும் அழிந்து விடுமல்லவா??)

ஆதலினால்
ஆண் குலத்தோரே....

இந்த இடத்தில் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன் ஒரு முற்றுப்புள்ளி.

இறுதியாக ஒரு வேண்டுகோள்...
முற்றுப்புள்ளி வைத்து வாக்கியம் முடித்து வைக்கப்படும் முன்,  இறுதி அத்தியாயத்தின் இந்த பக்கத்தை எட்டிப்பார்ப்பாயா....?.

ஒரு வேளை அது முடியாமல் போனால்,

யாருக்கும் தெரியாமல்
உன்
ஒரு சொட்டு கண்ணீரை என் உயிரற்ற உடலின் மீது தெளிப்பாயா...?.
இல்லை,
எதற்கு 💕
என்பாயா....?.

போடீ கிறுக்கி....
உன் வாசம் இல்லாமல்,
எனது
உயிரற்ற
உடலும்,
தீயில்
வேகாமல்
போனால்....?.




✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (7-Sep-21, 4:51 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kadasi kaditham
பார்வை : 160

மேலே