ஸ்பரிசம்

வெள்ளிக் கொலுசு சினுங்க
வெண்பட்டு பூப்பாதங்கள்
வெற்றுத் தரையில் பாதம் பதித்து
காட்டு வழிப் பாதையில்.....

உன் ஸ்பரிசம் பட்டு
மோட்சம் பெறும் பாக்கியம்
கோடானு கோடி உயிர்களுக்கு....

நானும் அந்த பாக்கியம் பெற, வரமொன்று
வேண்ட விளைகின்றேன் அய்யனே,
நுண்னுயிராக உருவெடுக்க.....

எழுதியவர் : கவி பாரதீ (12-Sep-21, 1:00 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : sparisam
பார்வை : 535

மேலே