நான் ஏன் பிறந்தேன்

திரும்பிய நேரத்தில்...அந்த காட்சி.
மிதிவண்டியில் இருந்து விழுந்த அந்த முதியவர். எனது ஐந்து வயது நினைவில் இன்றும் என்னை வாழ்த்தும் அந்த நொடி. ஓடிச் சென்று உதவினேன். அவர் யார் என்று தெரியாது. உதவும் குணம் இன்றும் என்னுள் இருப்பதற்கு அந்த நினைவு ஒரு புத்தகத்தின் முதல் ஏடு.

என் வாழ்வில் நான் யாரிடமும் இதைப் பகிர்ந்தது இல்லை. தர்மங்கள் செய்வோரின் குடும்ப வாழ்க்கை செழிப்பானதாக இருக்காது என்பர். உண்மைதானே. என் குடும்பத்தில் காணாத இன்பம், உதவி செய்வோரின் முகத்தில் காண்கின்றோம். அவரின் நினைவில் நாம் நல்ல மனிதனாக வாழ்கின்றோம். பொதுவாழ்வில் நம்மை மறக்கின்றோம். நான் பெரும் உதவிகளின் சிறு கைமாறாக எனது தொண்டுகள் அமைகின்றன.

காத்திருக்கும் நேரத்தில் ஒரு முறை மகிழூந்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தேன். அவ்வழியே அந்நிய நாட்டு தொழிலாள தம்பதிகள். கையில் குழந்தை. தன் கையால் வெயிலைத் தடுத்து பிள்ளையைச் சுமந்து சென்றாள். அந்நேரத்தில் என் வாகனத்தில் இருந்த குடை ஒன்றை எடுத்து கொடுத்தேன். இன்ப அதிர்ச்சியில் புன்னகித்து அதை பெற்றனர். அந்த சொற்ப நேரத்தில் கிடைக்கும் பேரின்பம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிறவி பலனைப் பெறுவதாய்த் தோன்றும். எந்த காரணமும் இன்றி கொடுக்கும் பரிசு, யாரென்று தெரியாத ஒருவருக்குச் செய்யும் உதவி, முன்பின் அறியாத ஒருவரைப் பார்த்து உதிரும் புன்னகை என ஒவ்வொரு நாளும் வர்ணங்கள் கலந்த ஓவியமாக்க முயற்சி செய்கிறேன். இன்று ஒருவரையாவது சிரிக்க வைக்க வேண்டும் என அன்றாடம் எழுந்தவுடன் சாபதம் செய்வேன். புன்னகை ஒருவகைத் தானம் என்கிறது இஸ்லாம்.

உதவிகள் கேட்போருக்கு உதவ மனம் இருப்பதில்லையாம். உதவியவர்கள், உதவிகள் கேட்க விரும்பாதவர்களாம். யாரோ 'Facebook' இல போட்டது. ஆழமாக யோசித்தால், உதவியவர்கள் ஏன் எளிதில் புண்படுகிறார்கள் என்று புரியும். இவ்வாறு இருப்பின், சிலர் நம்மிடம் பெரியதாக ஒன்றை எதிர்பார்த்து நம்முடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்வர். அவர்களின் நோக்கம் முடியும் வரை. பிறகு காணாமல் போய்விடுவார்கள். 👻

பல வேளைகளில் பலரின் உதவிகள் பெற்றேன். இன்று நான் உயிரோடு இருப்பதும், சாலையோரம் விழுந்த என்னை மருத்துவமனையில் சேர்த்தவர்களும், என்னை காப்பாற்றிய மருத்துவர்களும் தாதிக்களும், பல வாரம் கவனித்த குடும்ப உறுப்பினர்களும் தான். அதனல், என்னால் சுயநலமாக இருக்க முடியாமல் பொதுநல வேலையைத் தேடிக்கொண்டேன்.

யாரோ ஒருவரின் மனதில் நல்ல நினைவாக இருப்பதைச் சொர்க்கம் என்றும், பலரின் கடும் செல்லுக்கு ஆளாகி நரகத்தில் இருப்பதும் அவர் அவர்களின் வாழ்க்கை கணித்து விடும்.

நான் ஏன் பிறந்தேன்?, நாட்டுக்கு நலம் என புரிந்தேன்.... எனும் பாடல்களின் வரிகளோடு பிரிவோம்....

நன்றி
Siven19
நான் ஏன் பிறந்தேன்?

எழுதியவர் : Siven19 (16-Sep-21, 6:31 pm)
சேர்த்தது : siven19
Tanglish : naan aen piranthen
பார்வை : 177

மேலே