இருள் விலகட்டும்

என் காதல் கனிரசமே
என் மீது கோபம் கொண்டு
நீ பேசாமல் நடத்திய
"மௌனயுத்தம்" போதும்
உடன்படிக்கைக்கு நான் தயார்..!!

ஒரு வார்த்தை ...
ஒரே ஒரு வார்த்தை
உன் வாய் திறந்து பேசி
சிரித்துவிடு..!!

முத்துப்போல மின்னும்
உன் பல் வரிசையின்
ஒளியில் என் மனதின்
இருள் விலகட்டும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Sep-21, 10:20 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 113

மேலே