மனிதம்

சுவையில் மாற்றம் அறிந்து
அண்ணாந்து தாயின் முகம்
நோக்கியது......

மார்பு சேலையின் ஈரத்திற்கு
இணையான ஈரம்
கண்களிலும்.....

குழந்தை அழும் குரல் செவியில்
மோத தன் இயலாமையை எண்ணி
பெருமூச்சு விட்டது.....

குனிந்து தன் செழுமையான
தேகம் கண்டு வெட்கி
தலை குனிந்தது நாற்று!!!

எழுதியவர் : கவி பாரதீ (20-Sep-21, 2:11 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : manitham
பார்வை : 92

மேலே