யாரோ ஒருவன்
ஒருத்தன்
இருக்கிறான்,
அவன் பெயர்...
பெயரை விடுங்கள்,
பெயரில் என்ன இருக்கிறது...
அவன்,
சில நேரம்
நண்பன்
சில நேரம்
ஆலோசகன்.
சில நேரம்
விரோதி.
தனிமையில்
தவிக்கும் போது
பேச்சுக் கொடுப்பான்,
அழும்போது
ஆறுதல் சொல்வான்
தவறு செய்யும் போது
கடைவாயிலேயே
குத்துவான்.
அநிதீயை
பொறுக்க மாட்டான்.
சில நேரங்களில்,
கொன்று போட்டாலும்
பிழைத்து விடுகிறான்.
யாரோ ஒருவனை போல,
வாழ்ந்து கொண்டும்
செத்துக் கொண்டும் தான்
இருக்கிறான்,
எல்லோரிடமும்.
நம்மீது
அவன்ஆட்சி,
அவன் பெயர்
மனசாட்சி...
.
#கவிதைக்காரன்