அரும்பும் காதல்
கவிதையின் தாகம்
காதலின் ஏக்கம்
கலை பயின்ற கன்னியின் மேல்
கடைக்கண் பார்வை
கவனித்துக் கொண்டுதான்
கதை சொல்ல வந்தாளோ
நானும் இறுமாப்புடன்
இருந்தும் இதயம் படபடக்கின்றது
ஏதோ மயக்கம் உள்ளூர
ஆனாலும் வீராப்பு இதில் என்ன /
திரும்பினேன் அவள் வதனம்
பூவாக புன்னகை
அப்போதுதான் சுகம்
காதலின் சுகம் புரிந்தது
இருவர் மனமும் காதலில் சங்கமம்
சிறகை விரித்து பறப்பது போல்
உள்ளத்தில் ஊற்றெடுக்கும்
அழகிய எண்ணங்களில் இருவரும் ,,,,,,