என்னவள்_ஒத்த பார்வையிலே

என்னவள்

அன்பென்ற அலையில்
விழுந்த அக்கணமே
அவள் உறைத்தாள்
ஒத்த பார்வையில்

இனி விழியெல்லாம்
ஓர் முகம் நிறைந்திருக்கும்
அது எப்போதும்
உன்னுள் கலந்திருக்கும் என்று

அவள் ஏதும் அறிந்ததில்லை
ஏதும் திணித்ததில்லை
மாறாக அவள் என்னை உணர்ந்தாள்
கானல் நீரென கிடந்த என்வாழ்வில்
ஓர் அமுதகாணம்
கலைத்தென்றலாய் வீச

பூட்டிய மனச்சிறையில்
ஓர் புது ஒளி
புது இன்பம்
எல்லாம் அந்த
ஒத்த பார்வையில்

விழி ஒன்றிலே
யுகம் பல கடத்திய
தென்றல் அவள்

அனைத்தும் எனக்கென
ஆசை ஆசையாய் சேர்த்து
உயிர் உருக ஓர்
புதுக்கவிதை வடித்தால்
எனக்காக

உணர்ச்சியின் உச்சம் கண்ணீர்
அது அவள்மடி விழுகையில்
அவளுக்கு அவ்வளவு ஆனந்தம்
உதட்டில் அதை மறைத்து
உள்ளம் உணர்ந்து
ஒரு முத்தம் தந்தாள்
காதலின் உச்சம் அது

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (25-Sep-21, 7:51 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 301

மேலே