வாழ முயல்வார்

சிற்றறி வாளர் சிரந்தனி லூறும் சிறப்பறிவால்
கற்றதி லொன்றைக் கடைபிடித் தோங்கும் கவனமுடன்
பெற்றதை வைத்துப் பிழைப்பினைப் பற்றிப் பிடித்துயரும்
முற்றுணர்ந் தார்போல் முனைப்பொடு வாழ முயலுவரே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Sep-21, 1:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 135

மேலே