போகுமிடம் தெரியாமல்
தென்றல் போல்
நீ வந்தாய்
என்னை உன்னோடு
கைகோர்த்து
இணைத்துக்கொண்டாய்..!!
காதல் என்னும்
உல்லாச படகில்
ஊர்வலம் சென்றோம்...!!
திடீரென்று...
"ஜாதி புயல்" தாக்கி
என்னை பிரிந்து
நீ சென்றாய்...
இல்லை... இல்லை...
பிரித்து விட்டார்கள்...!!
வாழ்க்கை கடலில்
போகுமிடம் தெரியாமல்
நான் தவிக்கிறேன்...!!
--கோவை சுபா