முத்தம்

அவள் முத்தம் தருவாளா என்று
அவளுக்காக ஏங்கிய நாட்கள் எல்லாம் போயின
இன்று நான் ஏங்குவதெல்லாம் கைப்பிள்ளையாய்
என் கண்ணன் எந்தன் கருமாணிக்க தெய்வம்
தவழ்ந்து தவழ்ந்து வந்து என் கன்னத்தில்
முத்தம் தரும் நாள் என்றோ என்று ஏங்குகிறேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Oct-21, 10:12 am)
Tanglish : avan mutham
பார்வை : 91

மேலே