சஞ்சாரி
என்னை எங்கேயோ அழைக்கிறது
இயற்கையவளின் குரல்!
என்னோடு மட்டுமே வாவென்று
கைது செய்கிறது அதன் விரல்!
நாடி வரும் யாவர்க்கும்
நான் கண்ணாடியே!
காணலாம் நீயும் உன்னை
கண் முன்னாடியே என்கிறாள்!
எனக்கு மட்டுமே கேட்கும்
அவள் குரலை தொடர்கிறேன்.
எனக்கு மட்டுமே சொந்தமென
காற்றையும் கட்டி அணைக்கிறேன்.
எழுத்தின் வழியில்,
மணி கண்ணன்.