திப்பிலி அரிசி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
திப்பிலியின் தண்டுலஞ்,சி லேஷ்மத்தைப் போக்கிவிடும்
உப்பிசத்தை மேகத்தை ஓட்டுங்காண் - தப்பாமல்
வாத சுரந்தணிக்கும் மாகபரோ கந்தொலைக்குந்
தாதுவைவ ளர்ப்பிக்குஞ் சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
இது கபம், வயிறு உப்புதல், மேகம், வாதசுரம் சயநோய் இவற்றைப் போக்கி விந்துவை வளர்க்கும்