கோதுமை அரிசி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கோதுமையின் நற்குணந்தான் கோதிற் பலங்கொடுக்குந்
தாதுவிர்த்தி யாக்குந் தனிவாய்வைச் - சேதிக்கும்
பித்தம் அளிக்கும் பிரமேகத் தைக்கெடுக்கும்
உத்தமமாம் என்றே உரை
- பதார்த்த குண சிந்தாமணி
இது நல்ல பலம், சுக்கிலம், பித்தம் இவற்றை விரிவாக்கும்; வாதம், பிரமேகம், இவற்றை நீக்கும்