ஏன் அப்படிப் பார்க்கிறாய்
நீ ஏன் என்னை
அப்படிப் பார்க்கிறாய்
உன் காதல் வலையில்
வீழ்த்தவா?
இல்லை என்னைக்
கண்டு இரசிக்கவா?
புதிராகப் போன
உன் பார்வைக்கு
யாரிடம் விளக்கம்
கேட்பேன்?
பார்த்தது போதும்
என் உள்ளத்தில்
உரமூட்டாதே!
காதல் வலியை
என் மனம் தாங்காது.