ஆடாதோடை யிலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆடாதோ டைப்பன்னம் ஐயறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும் - நாடின்
மிகுத்தெழுந்த சன்னிபதின் மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கும் அறி
- பதார்த்த குண சிந்தாமணி
இவ்விலை கபம், வாதம், பல்வகைசுரம், 13 வகை சன்னி, வயிற்று நோய் ஆகியவற்றை நீக்கும்