பொய்யர் கும்பல்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

அறியா ததைநீ அறியேனென் றேசொல்
அறிந்திலை நீரும் அனைத்தை-- அறிவோம்
அறிகிலைநீர் சொல்வோம் அறிவீலி பொய்யை
தறிகெட் டுளறல் தவறு


ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்பக் குறள் வெண்பா

இல்லையெனல் யார்கும் எளிதாம் இயம்ப
தொல்லை விளக்குவார்கே சொல்

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்பக் குறள் வெண்பா

பகுத்தறிவா ளர்தேர்ந்தார் பாங்காயோர் சொல்லும்
தகுமெச்ச யில்லை யது


பகுத்தறிவாளர் கண்டு பிடித்த ஒருசொல் இல்லைக்காட்டு
வகுத்து விளக்கம் சொல்வது இருக்கு என்பார்க்கே ஒதுக்கப்பட்ட தொல்லையாம்

எழுதியவர் : பழனி ராஜன் (18-Oct-21, 10:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே