இன்றைய உறவுகளின் நெருக்கம்

உணவின் ருசி தொண்டையில் இறங்கும் வரை தான்
உன்னுடைய அழகும் நிறமும் முதுமை வரும் வரைதான்
உன்னுடைய ஆட்டமும் அகங்காரமும் இளமை இருக்கும் வரைதான்
காம சுகம் அதனை அடையும் வரை தான்
இரவு தூக்கம் விடியும் வரை தான்
மலரின் மணம் மலர் வாடும் வரைதான்
குடிகாரனின் ஆட்டம் போதை இறங்கும் வரை தான்.
கருவேப்பிலை உணவில் இருக்கும் வரை தான் மதிப்பு,
தீபம் ஒளி வீசும் வரைதான் மதிப்பு,
பணம் வசதி வாய்ப்புகளும் எளிதாக கேட்கும் பொழுது எல்லாம்
கிடைத்தால்தான் கடவுளுக்கு மதிப்பு,
இப்படித்தான் இன்று பல மனித உறவுகள் உள்ளன சூழ்நிலைக்கு
ஏற்ப நிலையில்லா நிறம் மாறும் பட்சவுந்திகள் போல நிறம் மாறுகின்றன.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (26-Oct-21, 2:07 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 127

மேலே