இரண்டு போட்டிகள் 🌻
***************************
என் நண்பன் சொன்னான்,
"நண்பா..
காதலுக்காக
உயிரையும் கொடுக்கலாம்.."
எனக்கு மிகப்பயங்கரமான கோபம்,
'ங்கொய்யால...
உன் காதலுக்காக
நீ உயிரைக் கொடுப்பது நியாயம்.
என் உயிரை எடுப்பது
எந்த விதத்தில் நியாயம்...?.'
இந்த
இரண்டாவது பாரா போலவே,
என் வாழ்விலும்
இரண்டு போட்டிகள்....
போட்டியில்,
எது ஜெயித்தாலும்,
பாதிப்பு எனக்கு மட்டுமே..
முதல் போட்டி:
கொரோணாவுக்கும்,
என் மனைவியின் சமையலுக்கும்...
யார் முதலில் என்னை
சாகடிப்பதென்று.
இரண்டாவது போட்டி:
என் கையெழுத்துக்கும்
என் தலையெழுத்துக்கும்.
எது மோசமாக இருப்பதென்று...
இரண்டு போட்டிகளிலும்
இரண்டுமே
மாறி மாறி
ஜெயிக்கிறது...!
நான்தான்
உங்களிடம்
ஏற்கனவே சொல்லியிருகிறேனே,
'இக்கவிதையின்
மூன்றாம் பாராவை...'
✍️கவிதைக்காரன்.