உலகத தந்தை -8

அருள் தாரும் தேவா எனக்கு
அருள் தாரும்
வரும் நாட்களில் எனக்கு
பெரும் அருள் தாரும்
சிறுவனாய் நான் உம் முன் நிற்கின்றேன்
பெரும் அருள் தாரும்
பெரும் பாவியான நான் இப்புவியில்
அரும் பாடு பட்டேன் ஆனது தான் என்ன
நான் என்பது நீங்கி எனக்குள் நீர் என்பது வந்தபோதே
என் பிறப்பும் சிறப்பானது - நீர்
வரும் நாட்களில் நானும் உம்
திருவடி பற்றுவேன்
நான் வாழும் காலத்தில்
நல்லவனாய் வாழ்ந்ததில்லை
பாவியான என்னையும்
சாமி மன்னியும்
என் கண்ணில் ஒளியும் இல்லை
இம் மண்ணில் வாழ வழியும் இல்லை
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
காரிருள் தெரிகிறது
நீர் என் வாழ்வில் வந்ததால் எனக்குள்
புது ஒளி எதுவென புறிந்தது
என் தாகத்திற்கு தண்ணீரும் நீரே
நான் பட்ட காயத்திற்கு மருந்தும் நீரே
வரும் தேவனே வரும் இப்புவிக்கு
சீக்கிரமாய் வரும் - சீர்கெட்ட இப்புவிக்கு

எழுதியவர் : சுந்தர் (28-Nov-21, 2:04 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 14

மேலே