இருவாட்சி மரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கண்ணொளிவு மெய்யிற் கமழ்மணமு நீடழகும்
நண்ணும் வலிமூர்ச்சை நாசமாம் - பண்ணளியுங்
கங்குலும்வாழ் வார்குழலே காரமொடு வெப்புமிகத்
தங்குமிரு வாட்சிமரத் தால் –
பதார்த்த குண சிந்தாமணி
இருவாட்சி மரத்தால் உட்டிணமும், கார்ப்பு சுவையுமுள்ள இருவாட்சி கண்ணொளியும், உடம்பில் நல்ல மணமும், அழகும் உண்டாகும்; உடல்குத்தலும், மூர்ச்சையும் நீங்கும்