முதிர்ந்த இளமை

இணைக்குறள் ஆசிரியப்பா

தோளும் சுறுங்கிட முடியும் நரைத்திட
துணிந்தே செய்த வேலைகள் மலைத்திட
உணவின் வகைகளை உடலும் எதிர்த்திட
ஓய்விலே உடலும் இருந்திடும் போதினில்
சுறுக்கென வலிகள் ஊசியாய் குத்திட
அழகாய் நகர்ந்த நாட்களோ அல்லலில்
தனது வேலையைச் செய்ய இயலா
நிலையில் உடலும் சோர்ந்திட
கரடையும் கழனியும் காணும் ஆவலோ
கானல் நீராய் காட்சித் தந்திட
சேர்த்த திரவியம் எவையாலும்
இந்நிலை தீர்க்க இயலா நிலையிலே
பிறந்த பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள்
எண்ணெயில் வெடிக்கும் கடுகாய்
எந்நேரமும் படபட எனவே சுழல
ஆற்றில் அடித்து வரப்பட்ட பாறையாய்
வயதின் முதிர்வெனும் வலையில் சிக்கிய
பெரும்புயல் கும்ப விளக்காய் மூடியே .
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Dec-21, 3:07 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : muthirntha ilamai
பார்வை : 29

மேலே