மனிதன் + அன்னை

மனிதன் + அன்னை.

மனிதன்:
அன்னையே!
உன் வாசலில்
வந்து நின்றேன்,
கண்களை மூடிக்
கொண்டாய் - ஏன்?

சத்தம் போட்டே
கூப்பிட்டேன்,
காதுகளை மூடிக்
கொண்டாய் - ஏன்?

நான் செய்த பாவம்,
என்ன சொல்!

அன்னை:
உன்மனதில் தான்
நான் இருந்தேன்,
உன் செயலெல்லாம்
பார்த்திருந்தேன்.

மனிதனாக நீ
வாழவில்லை,
மன அமைதி தேடி
சென்றுவிட்டேன்.

கன்னியாகுமரி நீ
செல்ல வேண்டாம்,
காசி யாத்திரை நீ
செய்ய வேண்டாம்.

மனமதனை சுத்தம்
செய்,
மனிதனாக நீ வாழக்
கற்றுக் கொள்!
மறுபடியும் உன் மனதில்
வந்தமர்வேன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (2-Dec-21, 5:28 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 67

மேலே