நாய்வேளை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதிமிகு பீநசமும் ஓடுங்காண் - போதெறிந்து
காய்வேளைக் காயு(ம்)விழிக் காரிகையே வையமதில்
நாய்வேளை யுண்ண நவில்

- பதார்த்த குண சிந்தாமணி

வாதப்பொருமல், உடற்கடுப்பு, குத்தல், காதிரைச்சல், சிலேட்டுமம், பீனிச நோய்கள் ஆகியவற்றை நாய்வேளை போக்கிவிடும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-21, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே