அறிவிலிகள்
*அறிவிலிகள்*
😭😭😭😭😭
🙈 புள்ளி வாங்கி பள்ளி நடத்தல்
புத்திசாலி தனமாம் !
பெத்த குழந்தை செத்து போனா
பத்து இலட்சம் பணமாம் !
🙈 கைபேசியின் செயல்பாட்டில் தான்
கல்வி உலகம் வாழுது !
கையாலாகாதார் ஆட்சியிலே
பள்ளி குழந்தை சாகுது !
🙈 வெகுமதிகள் வாழும் நாட்டில்
அனுமதிக்கு குறைவில்லை !
வீனர் பள்ளி கழிவறைக்கு
செடி மறைவே தேவலை !
🙈 வழுக்கி விழுந்த இடத்தை பார்க்க
குழுக்கள் அமைத்து பயனில்லை !
பலிக்குப்பலி தீர்த்தாக்கூட
பாவத்துக்கு நிகரில்லை !
😭😭😭😭😭😭😭😭😭😭😭