புத்தாண்டே வருக

" 1. தோப்புக்கரணம் போட்டிடுவோம்
கணபதி,
உமக்கு தோப்புக்கரணம்
போட்டிடுவோம் கணபதி,

பிறக்கும் இப்புத்தாண்டில்,

பாதுகாப்பு தந்திடுவாய் கணபதி,
எமக்கு பாதுகாப்பு தந்திடுவாய்
கணபதி.


2. லட்டு உமக்கு கொடுத்திடுவோம்
கணபதி,
ருசிக்க லட்டு உமக்கு
கொடுத்திடுவோம் கணபதி,

இனிக்கும் இப்புத்தாண்டில்,

பட்டான வாழ்க்கை தந்திடுவாய்
கணபதி,
எமக்கு பட்டான வாழ்க்கை
தந்திடுவாய் கணபதி.


3. கொழுக்கட்டையும்.
அளித்திடுவோம்
கணபதி,
சுவைக்க கொழுக்கட்டையும்
அளித்திடுவோம் கணபதி,

மணக்கும் இப்புத்தாண்டில்,

வழுக்காமல் நடக்க செய்வாய்
கணபதி,
வாழ்வில் வழுக்காமல் நடக்க
செய்வாய் கணபதி.


4. அருகம் புல்லின் மாலை
தருவோம் கணபதி,
உனக்கு அருகம் புல்லின்
மாலை தருவோம் கணபதி,

துளிர்க்கும் இப்புத்தாண்டில்,

நெருங்கும் துயரை
விரட்டிடுவாய் கணபதி,
எம்மை நெருங்கும் துயரை
விரட்டிடுவாய் கணபதி.


5. இன்னும் என்ன வேண்டும்
உனக்கு சொல்லு கணபதி?
எங்கள் கணபதி!

மின்னும் பொன்னும் அரிதல்ல!
தின்னும் பொருள் பெரிதல்ல!

உண்மை பக்தி ஒன்றே
உனக்கு போதும் கணபதி!

எல்லா நலன்களும், எல்லா
வளங்களும், அனைவருக்கும்
இப்புத்தாண்டில் அளித்திடுவாய்,

கணபதி, எங்கள் கணபதி!."

எழுதியவர் : (1-Jan-22, 8:25 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : puthaande varuka
பார்வை : 78

மேலே