காட்டேரி
மூச்சு காற்றையே
காசாக்கி இரசிக்கிறான்
பலுன்காரன்....
அந்தரத்தில் ஆடிக்கொண்டு
கையேந்தும் வித்தைக்காரனாய்
ஆடிக்காற்றிலே
பறந்து கொண்டே
பறக்கிறது வண்ண பலூன்கள்...
பறக்கின்ற
பலுனுக்கும் தெரியாது
பறக்கவிடும் குழந்தைக்கும்
புரியாது
காட்டேரி மலைமேலே
கருப்புவந்து
காவுவாங்குமென்று....
வெடித்த பலுன்
துகள்கள்
நெஞ்சில் வந்து விழும்போது
காலச் சூழலிலே
மூவர்ண கொடிபோர்த்தி
வெடித்த பலுன்
துகள்களை
ஆகாய விமானத்தில்
சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறோம்...
காற்றிலே
ஒரு இசைகீதம்
சோகமாய் வந்துவிழ
சாஹே ...சஹச்சா அச்சா....
குன்னூரு போகையில
காட்டேரி கவுத்துட்டா
காற்றடைத்த பலுனூம் கற்பப்பையாய் வெடித்திற்றே ......
காலநிலை மாற்றத்தில்
கண்ணீரோடு நிற்கிறோம்
காரணத்தை தெரிந்து கொள்ள கருப்பு
பெட்டியை
வணங்குறோம்.